இலங்கை செய்திகள்

மொழிப் பயிற்சி அறிமுக நிகழ்விற்கு 12 நாடாளுமன்ற உறுப்பினர்களே வருகை

12 Aug 2017

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் யோசனைக்கமைய இரு உத்தியோகபூர்வ மொழிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கற்பிக்கும் வகுப்பின் அறிமுக (Orientation) நிகழ்வு நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புக்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 40 உறுப்பினர்கள் மாத்திரமே பதிவு செய்துள்ள அதேவேளை, நேற்றைய அறிமுக நிகழ்வுக்கு 12 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்துள்ளனர்.

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் சந்தன அருணதேவ மற்றும் பணிப்பளார் நாயகம் பிரசாத் ஆர். ஹேரத் ஆகியோரின் பங்குபற்றலில் இந்த அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

அறிமுக நிகழ்வுக்கு 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே பங்குபற்றியுள்ளமை பரிதாபமான நிலைமை என தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பளார் நாயகம் பிரசாத் ஆர். ஹேரத் இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV