இலங்கை செய்திகள்

மொறட்டுவயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

14 Mar 2019

மொறட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்