13 Aug 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்தாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
பிரபலமடைந்துள்ள அரசியல் கட்சி என்ற வகையில் பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியும் என ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள கோட்டபாய ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.