இலங்கை செய்திகள்

மே 8ஆம் திகதி சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

16 Apr 2018

மே மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக கூட்டு எதிரணியால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான நீண்ட பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

“உண்மையான எதிர்க்கட்சியின் பலம் 54 இல் இருந்து 70 ஆக அதிகரித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஒன்றிணைந்த எதிரணிக்குத் தான் தரப்பட வேண்டும். இது தொடர்பாக சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்