கனடா செய்திகள்

மேற்கு வான்கூவர் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து

22 Sep 2022

மேற்கு வான்கூவர் பகுதியில் முதலாம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் ஆறு அம்பியூலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பிரிட்டிஷ் கொலம்பிய சுகாதார அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதாகவும், கட்டுபாட்டை இழந்த ஒரு வாகனம் மற்றைய வாகனத்தின் மேல் விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலையில் தவறான திசையில் பயணித்த வாகனம் காரணமாக இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தவறான திசையில் பயணித்த வாகனம் இரண்டு வாகனங்களில் சிறிதளவில் மோதுண்டதாகவும் மூன்றாவது வாகனத்தில் கடுமையாக மோதுண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வான் ஒன்றும் கார் ஒன்றும் இந்த விபத்தில் மோதிக்கொண்டதாகவும் வானை செலுத்திய சாரதி தவறான பாதையில் பயணித்துள்ளார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam