வாழ்வியல் செய்திகள்

மூளை பாதிப்பை தடுக்கும் சிலந்தி விஷம்

21 Mar 2017

சிலந்தியின் விஷத்தில் இருக்கும் புரோட்டீன், மூளை பாதிப்படையாமல் தடுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பொதுவாக பக்கவாதத்தின்போது மூளை பாதிப்படைவது வழக்கம். மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடும்போது பக்கவாதம் வரும். அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு ஒரே ஒரு முறை சிலந்தியின் விஷத்தில் உள்ள புரோட்டீன் ஹெச் டு 1 ஏ வை கொடுத்தால் போதும். மூளை பாதிப்படையாமல் தடுத்து விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இப்போது இது சோதனை சாலையில் இருக்கும் எலிகளுக்கு கொடுத்து சோதித்து பார்த்திருப்பதாகவும், அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் இதை இன்னும் மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து பார்க்கவில்லை.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மற்றும் மோனாச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்காக பிரேசர் தீவுகளில் குகைகளில் வசிக்கும் சிலந்திகளை பிடித்து வந்து ஆராய்ச்சி செய்தனர். அப்போதுதான் இந்த உண்மை தெரிய வந்திருக்கிறது.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்