இலங்கை செய்திகள்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்க தீர்மானம்

11 Jul 2019

அமைச்சுப் பதவிகளை துறந்த 9 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றதில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானத்தை முஸ்லிம் உறுப்பினர்கள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் இன்று இரவு மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இருப்பினும் இது குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்