இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் புத்தக வெளியீடு

14 May 2019

முள்ளிவாய்க்கால் 10வது  ஆண்டின் நினைவாக கடற்சூரியன் வெளியிட்ட "முள்ளிவாய்க்கால்" புத்தக வெளியீடு நேற்று (மே 12) ஸ்கார்பரோவில் நடைபெற்றது.

கடற் சூரியன் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக மண்டபம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை நினைவுபடுத்தும் புகைப்படங்களும், சிறிய பதாதைகளுமாக கட்சியளித்தது.

 

முள்ளிவாய்க்காலில் மழை, வெயிலில் இருந்து எம் மக்களை காத்த தற்காலிக கூடாரம் ஒன்றின் மாதிரி ஒன்று மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் இதுவரை ஈழத்தில் நடைபெற்ற 130 படுகொலை சம்பவங்களை நினைவுகூர்ந்து 130 நினைவுத் தீபங்கள் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்காக வந்திருந்தவர்கள் அனைவருக்கும் முள்ளிவாய்க்காலின் நினைவை நினைவூட்டும் வகையில் கலந்துகொண்டவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்