இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் உயிரிழப்பு

08 Oct 2019

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.

பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் மோதியதில்  சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் உயிரிழந்ததுடன் மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். செல்வரத்தினம் கேதீஸ் (வயது-11) என்ற மாணவனே உயிரிழந்தார்.

இந்த விபத்து காரணமாக ஆத்திரமடைந்த மக்கள்  பொலிஸார் விபத்தை ஏற்படுத்தியவருக்கு சாதகமாக செயற்படுவதாக தெரிவித்து  ஒன்று திரண்டதால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்