இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது

10 Aug 2018

தடைசெய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டை நிறுத்தக் கோரி, முல்லைத்தீவு மீனவர்கள் எட்டாவது நாளாக இன்றும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் கடந்த 2 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை நடத்தியதோடு திணைக்களத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புதிய அதிகாரிகள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள்  மீனவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்று தருவதாக உறுதியளித்துள்ளனர்.

அந்தவகையில் எதிர்வரும் 12ஆம் திகதி மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடப்போவதாகவும் அதன் பின்னரே மீனவர்களுக்கு தீர்வை வழங்க முடியுமெனவும் அவ்வதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்தும் அவர்கள் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV