இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் வீசிய மழையுடன் கூடிய காற்றின் காரணமாக சில வீடுகள் சேதம்

12 Jul 2019

முல்லைத்தீவில் நேற்றைய தினம் வீசிய மழையுடன் கூடிய காற்றின் காரணமாக சில வீடுகள்  சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை  பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது. 

இதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தாம் தொடர்பு கொண்டிருப்பதாக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார். 

சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 130 000 ரூபா நிதியை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நேற்று வீசிய பலத்த காற்றின் காரணமாக 13 வீடுகள் ஓரளவுக்கே சேதமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இதே வேளை பல மாத காலமாக நிலவிய வரட்சிக்கு பின்னர் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது. சில வீடுகள் மற்றும் உற்பத்தி பயிர்கள் என்பன காற்றின் காரணமாக பாதிப்படைந்துள்ளன. 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்