இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

17 Jul 2017

முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றது.

மேற்படி கவனயீர்ப்பு பேரணியானது முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பமானது.

போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகளைக் கட்டியெழுப்பும் விதமாக உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட, இனப்பரம்பலை சிதைக்கும் விதமாகக் குடியேற்றங்களை உருவாக்கக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனவே இந்த செயற்பாட்டை முற்றாக எதிர்க்கிறோம் என்று ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ. புவனேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பல்வேறு அமைப்புக்களை சார்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்