இலங்கை செய்திகள்

முறையான பிரதமர் இன்மையால் நாடு நெருக்கடியில் - குமார வெல்கம

08 Nov 2018

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாகவும், எனினும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

தற்போது ஏற்பட்டுள்ள நிலமை காரணமாக நாடு பாரிய நெருக்கடியை எதிர் கொண்டுள்ளதாகவும்  அவர் கூறுகின்றார். 

முறையான பிரதமர் இன்மையால் இன்று அரச அலுவலகங்கள் சரியான முறையில் இயங்குவதில்லை என்று கூறியுள்ள குமார வெல்கம, ஒரு பிரதமர்  பிரதமர் அலுவலகத்திலும் மற்றொரு பிரதமர் அலரி மாளிகையிலும் இருப்பதால் நாட்டிற்கு எவ்வித பயனும் இல்லை என்று அவர் கூறினார். 

இதைவிட சிறந்த முறையில் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ பெற்றுக்கொண்டிருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்