இந்தியா செய்திகள்

மும்பையில் நடிகைகள் குடியிருக்கும் அடுக்குமாடியில் தீ விபத்து

13 Jun 2018

மராட்டிய மாநிலம் மும்பையின் ஓர்லி பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை 6 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் பிடித்துள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகிறது. குடியிருப்பு கட்டடத்தில் இருந்து 90 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்