இலங்கை செய்திகள்

முன்னாள் போராளிகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

06 Dec 2018

வவுணதீவில் இரு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் போராளிகளை தொடர்புபடுத்தி அவர்களை வேட்டையாடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சால்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன் , யோகேஸ்வரன் மற்றும் கோடீஸ்வரன் ஆகியோரும் இதனை வலியுறுத்தினர்.

சட்டத்திற்கு முரணான வகையில் ஆட்சியை கைபற்றியவேர்களே இதன் பின்னணியில் இருக்கின்றார்கள் என்பதே எமது சந்தேகமாகும். மீண்டும் வெள்ளை வான் கலாசாரத்தையும் இரவு நேர கைதுகளையும் மேற்கொள்வதற்கான ஒரு சூழ்ச்சியாக இது உள்ளது. எனவே இது தொடர்பில் புலனாய்வுத் துறையினர் உடனடி விசாரணைகளை ஆரம்பித்து உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் எனவும் இவர்கள் நாடாளுமன்றில் வலியுறுத்தினர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்