இந்தியா செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில்!

13 Jun 2018

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாற்றல் -பேச்சுதிறன் என பன்முகத் திறன்கொண்டவர் வாஜ்பாய்,
1996 முதல் 2004 ஆண்டு வரை இந்திய பிரதமராக இருந்தார்.

அவரது ஆட்சியில் நாட்டில் பல்வேறு திட்டங்கள் நடந்தன. சிறந்த நிர்வாகியான இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதியை சிறந்த நிர்வாக நாளாக
கடைபிடிக்கப் படுகிறது. 2014 இல் இவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா வழங்கப்பட்டது.

பல ஆண்டுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வரும் இவர் இன்று டில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவருக்கு பிரபல மருத்துவர் ரஞ்சித் குலோரியா தலைமையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவரது உடல் நலம் தொடர்பான மருத்துவ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அவருக்கு முழு மருத்துவ பரிசோதனை நடப்பதாகவும் இது வழக்கமானது என்றும் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்