இலங்கை செய்திகள்

முன்னாள் பிரதமர் மற்றும், அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு

08 Nov 2018

முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக, அமைச்சர்களின் செயலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பொதுச் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு இன்று செய்யப்படவுள்ளதாக, குறித்த சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்றுடன் 13 தினங்கள் கடந்துள்ள நிலையில்,முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து அலரி மாளிகையில் தங்கியிருந்து பொது சொத்துகளை தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

அதேபோல் முன்னாள் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும்  அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள், வீடுகளை இதுவரை கையளிக்கவில்லை என்றும் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV