இலங்கை செய்திகள்

முனை கடற்தொழிலாளர்களின் எச்சரிக்கை

12 Oct 2021

இந்திய இழுவைப் படகையும் தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை, எந்தவோர் அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள்  அறிவித்துள்ளனர்.

நேற்றையதினம் (11), முனை கடற்தொழிலாளர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தின் போதே, இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அத்துடன், அரசியல் கட்சிகள், தமது அறிவித்தலை மீறி தமது இடத்திற்கு வரும் பட்சத்தில், மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள்  என்பதனையும் தாம் உறுதியாக, மனவருத்தத்துடன் அறியத்தருவதாகவும், அப்பகுதி மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam