இந்தியா செய்திகள்

முதல்-மந்திரிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள், தேவேந்திர முதலிடம்

13 Feb 2018

 இந்தியாவில் 11 முதல்-மந்திரிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது

இவ்வரிசையில் மராட்டிய மாநில பாரதீய ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முதலிடம் பெற்று உள்ளார். தேவேந்திர பட்னாவிசுக்கு எதிராக 22 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் மூன்று வழக்குகள் மிகவும் முக்கிய கிரிமினல் வழக்குகள் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு எதிராக ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவின் 31 மாநில முதல்-மந்திரிகள் தொடர்பான தகவல்களை ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டு உள்ளது. 11 மாநில முதல்-மந்திரிகளுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கிரிமினல் வழக்குகளை எதிர்க்கொண்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மராட்டிய மாநில பாரதீய ஜனதா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். கேரளா மாநில முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு எதிராக 11 கிரிமினல் வழக்குகள் உள்ளது. அவருக்கு எதிராக ஏமாற்றுதல், சொத்து விவகாரங்களில் நேர்மையற்ற செயல்களை தூண்டுதல், வன்முறை மற்றும் கிரிமினல் சதிதிட்டம் என்பவை உள்ளிட்ட முக்கிய கிரிமினல் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கொண்டு உள்ளார்.

இவ்வரிசையில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 10 கிரிமினல் வழக்குகளுடன் மூன்றாவது இடம் பிடித்து உள்ளார். சட்டவிரோதமாக கூட்டமாக கூடுதல், அரசு அதிகாரிகளை அவர்களுடைய அவர்களுடைய பணியை செய்யவிடாது தடுத்தல், அவதூறு உள்ளிட்ட வழக்குகளை அவர் எதிர்க்கொண்டு உள்ளார். இதற்கு அடுத்தப்படியாக ஜார்க்கண்ட் மாநில பாரதீய ஜனதா முதல்-மந்திரி ரகுபார் தாசுக்கு எதிராக 8 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

இதற்கு அடுத்த இடங்களில் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் (4 வழக்குகள்), உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் (4 வழக்குகள்), ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு (3 வழக்குகள்), தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் (2 வழக்குகள்), புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமி (2 வழக்குகள்) இடம்பெற்று உள்ளனர்.

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு எதிராக ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்