கனடா செய்திகள்

முதலாவது பெண் வான் அம்புலன்ஸ் அணியில் இரு பழங்குடி பெண்கள்

12 Mar 2018

மனிரோபாவை சேர்ந்த இரு பழங்குடி பெண்கள் மாகாணத்தின் முதலாவது பெண் வான் அம்புலன்ஸ் அணியினராக பதவி ஏற்று வரலாறு படைத்துள்ளனர்.

கப்டன் றொபின் சிலாசெக்ரா மற்றும் முதல் அதிகாரி றவென் பேர்டி இருவரும் கடந்த வாரம் மிசிநிப்பி எயர்வேயின் வான் அம்புலன்ஸ் விமானத்தில் பறந்துள்ளனர்.

ஒரு டசினிற்கும் குறைவான பழங்குடியை சேர்ந்த பெண் விமானிகளே கனடாவில் உள்ளனர் என கூறப்படுகின்றது.

இப்பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முன்னர் சந்தித்ததில்லை. சிலாசெக்ரா நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார். விமான பயிற்சி பாடசாலைக்கு செல்வதற்கு முன்னர் மத்திய மனிரோபா சமூகத்தை விட்டு வெளியே சென்றதில்லை.

பேர்டி ஷமட்டாவா பறக்கும் சமுகத்தை சேர்ந்தவர். 21-வயதில் வணிக உரிமத்தை பெற்றவர். பறப்பதற்கான வாய்ப்பு கிட்டும் வரைக்கும் தடை செய்யப்பட்டிருந்தவர்.

தங்களின் சாதனைகளும் கவனத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதென இரு பெண்களும் தெரிவித்தனர். மற்றய பிள்ளைகளிற்கும் இது ஒரு முன்மாதிரியாக அமையும் எனவும் கூறியுள்ளனர்.

இப்பணியானது,  முழு இருட்டு மற்றும் பனிப்புயல் ஊடாக பறப்பதில் சவால்கள் உள்ள போதிலும் மதிப்பானதென ஷிலாசெக்ரா கூறினார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்