சினிமா செய்திகள்

மீண்டும் டுவிட்டரில் த்ரிஷா

17 Feb 2017

நடிகர், நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களுக்கேன தனி கணக்கை ஆரம்பித்து ரசிகர்களுடன் நேரடித் தொடர்பு வைத்து வருகிறார்கள். அவர்களை விமர்சிக்கும் கருத்துக்கள் வந்தால் அதை ஏற்றுக் கொள்ளாமல் தங்களைப் பற்றிப் பெருமையாக, பாராட்டும்படி கருத்துக்கள் வந்தால் மட்டும் அதை ரி-டுவிட் செய்வதும், அதற்கு பதில் செய்வதுமாக இருக்கிறார்கள். 

ஜல்லிக்கட்டு போராட்டம் ஆரம்பமான நாளில் 'பீட்டா' ஆதரவாளரான த்ரிஷாவை, தமிழ் உணர்வாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். த்ரிஷாவைப் பற்றிய ஒரு மோசமான 'அஞ்சலி' போஸ்டர் ஒன்றைத் தயார் செய்து அதை சமூக வலைத்தளங்களில் பரப்பினார்கள். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த த்ரிஷா, “இதுதான் தமிழ்க் கலாச்சாரமா” என கேள்வி எழுப்பினார். முதலில் த்ரிஷாவுக்கு சிலர் ஆதரவளிக்க முன் வந்தனர். ஆனால், தொடர்ந்து தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றி த்ரிஷா பேசுவதா என தமிழ் உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை டிவிட்டரில் கடுமையாக விமர்சித்தார்கள். தனக்கு இப்படிப்பட்ட எதிர்ப்பு கிளம்பியதை சிறிதும் எதிர்பார்க்காத த்ரிஷா டிவிட்டரை விட்டு விலகினார். அதோடு காவல் துறையிலும் புகார் அளித்தார். பீட்டாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்தார். 

சுமார் ஒரு மாத காலத்திற்கும் மேலாக தனது டிவிட்டர் கணக்கை மீண்டும் திறந்த த்ரிஷா சில நாட்களுக்கு முன்பு காதலர் தினத்தன்று வெளியான தன்னுடைய '96' பட முதல் பார்வையை வெளியிட்டு மீண்டும் டிவிட்டரில் ஐக்கியமானார். அடுத்து அவருடைய அடுத்த படமான 'கர்ஜனை' படத்தின் முதல் பார்வையையும் டிவிட்டரில் பதிவு செய்தார்.

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்