இந்தியா செய்திகள்

மிஸ் இந்தியா அழகி போட்டிக்கு மருத்துவ கல்லூரி மாணவி தேர்வு

22 Sep 2022

மிஸ் இந்தியா அழகி போட்டிக்கு குமரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மிஸ் இந்தியா அழகிப்போட்டி இந்திய அளவில் நடத்தப்படுவது வழக்கம். அந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான மாநில அளவிலான அழகி போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 750-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் கல்லூரி மாணவிகளும் அதிக அளவில் இடம்பெற்று இருந்தனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் வின்னர், ரன்னர் என்ற அடிப்படையில் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றனர். அதில் வின்னர் மற்றும் ரன்னர் என்ற அடிப்படையில் மிஸ் தமிழ்நாடு என்ற பட்டதை 2 பேர் வென்றனர். அதில் மிஸ் தமிழ்நாடு ரன்னர் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தளவாய்புரத்தை சேர்ந்த நிஜோஜா (வயது 21) என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

மிஸ் தமிழ்நாடு பட்டம் பெற்ற நிஜோஜா நேற்று சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு வந்தார். அவருக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த போட்டி மூலம் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு வின்னர் மற்றும் ஒரு ரன்னர் என தேர்வு செய்யப்பட்டவர்கள் வருகிற டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான அழகி போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

இது குறித்து மாணவி நிஜோஜா கூறும்போது, "தேசிய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்" என்றார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam