உலகம் செய்திகள்

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

12 Jan 2018

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் நாட்டில் நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரங்கூனில் இருந்து சுமார் 186 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது என அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால்,தூங்கி கொண்டு இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து தெருக்களில் குவிந்தனர். கடும் குளிரிலும் மக்கள் அதிக அளவில் வீதிகளில் நின்றதை கவனிக்க முடிந்தது. நிலநடுக்கத்தால் சில கட்டிடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV