இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி 31 கால்நடைகள் பலி

23 Jun 2022

அம்பறை மாவட்டம், பக்கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில், மின்னல் தாக்கத்தினால் 31 கால்நடைகள் மரணமடைந்துள்ளன.

கடந்த 21 ஆம் திகதியன்று 31 கால்நடைகளும் ஒரே இடத்தில் நின்றிருந்தன. அப்போது திடீரென மழைப் பெய்துள்ளது.  அப்போது மின்னல் தாக்கியதில் 31 கால்நடைகளும் மரணமடைந்துள்ளன.

அதில், 4 ஆண் கால்நடைகளும், 24 பெண் கால்நடைகளும் அடங்குகின்றன. ஏனையவை குட்டிகளாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam