கனடா செய்திகள்

மிசிசாகா கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் வலைவிரிப்பு

16 May 2018

மிசிசாகாவின் டெர்ரி வீதி மற்றும் கொரிவே டிரைவ் பகுதியில் அமைந்துள்ள, பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த கொள்ளையில் எத்தனை பேர் தொடர்பு என்பன உள்ளிட்ட விபரங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களையும் ஆராய்ந்து வருகின்ற போதிலும், சந்தேக நபர்களின் அடையாளங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் போது, கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த 20வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்