இலங்கை செய்திகள்

மாலைதீவிற்கு மணல் ஏற்றுமதி

14 Sep 2021

மாலைதீவில் புதிய தீவு ஒன்றை நிரப்புவதற்காக இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு தேவையான வர்த்தக ரீதியிலான மணல் தொகை மாத்திரம் ஏற்றுமதி செய்யப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

அதற்காக 8 கியுப் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், கியுப் ஒன்றுக்கு 180,000 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் அறவிடப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் குறிப்பிட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam