இலங்கை செய்திகள்

மாற்றுதிறனாளிகளிற்கான அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது

12 Jul 2018

கிளிநொச்சி மாற்றுதிறனாளிகளிற்கான அலுவலகம் இன்று(ஜுலை12) வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் அலுவலகத்தினை திறந்து வைத்தார்.


ஆளுனரின் மாகாண நிதியொதுக்கீட்டில் இந்த அலுவலகம் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன், வடமாகாண மகளிர் மற்றும் சமூக சேவைகள், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன், ப.அரியரத்தினம், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

படங்கள் நன்றி - R.S.ரஞ்சன்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்