இலங்கை செய்திகள்

மானிப்பாய் பகுதியில் வாள் மற்றும், இரும்புக் கம்பிகளுடன் வந்த நான்கு இளைஞர்கள் கைது

11 Jul 2018

வாள் மற்றும், இரும்புக் கம்பிகளுடன்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சுற்றுக் காவலின் போது கல்லுண்டாவெளிப் பகுதியில் வைத்து நேற்றிரவு இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளையடுத்து பொலிஸ் ரோந்து, பொலிஸ் காவல் என்பன பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட பொலிஸ் சுற்றுக் காவலின் போதே நேற்றிரவு வாள்கள் இரும்புக் கம்பிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV