இலங்கை செய்திகள்

மானிப்பாயில் இடம்பெற்ற விபத்தொன்றில் மாணவன் பலி

01 Dec 2017

மானிப்பாய் ஆலடி பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை மாலை மானிப்பாய் பகுதியில் இருந்து உடுவிலில் உள்ள தனது வீட்டிற்கு குறித்த மாணவன் ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளில் சென்றபோது பிரதான வீதியால் துவிச்சக்கர வண்டியில் வந்த பெண்ணெருவர் குறுக்கு வீதிக்கு தீடீரென திரும்பியதால்மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் துவிச்சக்கர வண்டியுடன் மோதியதால்இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட போதிலும் மாணவன் மரணமடைந்துள்ளார். உதயசூரியன் வீதியை சேர்ந்த அடம்ஸ் நீல்சன் லியனாடோ அலோசியஸ் என்ற 17 வயதுடைய மாணவனே பலியானவர் ஆவார்.

இவ்வபத்தில் படுகாயமடைந்த புதுமடம் எடுவில் தெற்கை சேர்ந்த 33 வயதுடைய அமிர்தரஞ்சினி சுரேந்திரன்என்கின்ற பெண் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV