வாழ்வியல் செய்திகள்

மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை கொண்டுவருமா C-19 தடுப்பூசி

26 Apr 2021

கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் மாதவிடாய் சுழச்சி முறையில் மாற்றம் ஏற்படும் என்று பரவி வரும் தகவலில் உண்மை கிடையாது என்றும், இது தொடர்பாகத் தெளிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச அளவில் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதினால், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுவதாகவும், இதனால் மாதவிடாய் பிரச்சனைகள் உண்டாவதாகவும் சில கருத்துகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இத்தகவல் உண்மை கிடையாது என்று ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படத் தடுப்பூசி மட்டும் காரணம் கிடையாது. நமக்கு ஏற்படும் மன அழுத்தம், உடல்நலக்குறைவு, உணவு முறையில் மாற்றம், உடல் செயல்பாடு உள்ளிட்டவை மாதவிடாயைப் பாதிக்கிறது. கொரோனா தடுப்பூசியால்தான் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கூறுவது தவறு என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும்போது ஏற்படும் காய்ச்சலைப்போல மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் உடல் நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படாது. பெண்ணின் உடலில், ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு அதிகமாகும். அப்போது, கருப்பையிலிருந்து கருமுட்டைகள் வெளியாகும். இந்த கருமுட்டைகள் விந்தணுவுடன் சேர காத்துக்கொண்டிருக்கும். விந்தணுக்கள் வரவில்லை என்றால், ப்ரொஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து, கருமுட்டைகள் உடைந்து போகும். இதுவே உதிரமாக வெளிவரும்.

இந்த சுழற்சி ஏற்படுவதற்கு நமக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி தேவை. கருப்பையின் உள்ளமைப்பு தடிமனாவதற்கும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கும் வெவ்வேறு வகையான நோய் எதிர்ப்பு செல்கள் (cells) காரணமாக இருக்கிறது. இதனால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது மாதவிடாய் சுழற்சியில் சிறிது மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இது தொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி முதல் எல்லா மருந்துகளும் பெண்களின் உடலில் எப்படிச் செயல்படும் என்ற தெளிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam