இலங்கை செய்திகள்

மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்திடம் வழங்க முடியாது - சீ.வீ.கே

25 Mar 2019

மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரம் அளிக்கப்பட்ட கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரம் வழங்கப்பட்டவையாக கல்வி, சுகாதாரம், கூட்டுறவு போன்ற விடயங்களே காணப்படுகின்றன. எனவே, மாகாணப் பாடசாலைகளை தேசிய பாடசாலையாக்கும் வேலைத்திட்டத்திற்கு இடமளிக்கமுடியாது என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தலின் மூலம் அடிபணிய வைக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்