இலங்கை செய்திகள்

மாகாணசபைத் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் அறிவுறுத்தல்

08 Nov 2018

மாகாணசபைத் தேர்தல்களை துரித கதியில் நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பணிப்புரை விடுத்துள்ளனர்.

ஏதாவது ஓர் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

இந்தத் தகவலை லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும், பிரதமரும் அண்மையில் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

தொகுதிவாரி அடிப்படையில் தேர்தலை நடாத்துவதற்கு காலம் தாழ்த்தப்படுமாயின், இந்த தடவை மட்டும் பழைய முறையிலேயே தேர்தலை நடத்த முடியும் என ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மஹிந்த தேசப்பிரிவிற்கு இடையிலான சந்திப்பின் சுட்டிக்காட்டப்பட்டது.

குறுகிய காலத்தில் தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முயற்சித்து வருகின்றனர் என லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்