இலங்கை செய்திகள்

மாகாணங்களிற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் - விஜயகலா

07 Dec 2017

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டியது அவசியமானதுடன் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் அமுலில் இல்லை எனவும் புதிய அரசியல் சாசனத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிர்வது குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமானது.

அத்துடன், புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என  அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV