இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம்

11 Jul 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அச்சுறுத்தலுக்குள்ளான மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க தீரமானித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களுக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக ஊடகவியலாளர்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் பரிந்தரைகளை பெற்றுக்கொள்வதற்கு துணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, மின்னஞ்சல் அல்லது தொலைநகல் ஊடக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி வரையில் முறைப்பாடுகளை ​தெரிவிக்கலாம்.

அச்சுறுத்தப்பட்ட, கொலை செய்யப்பட்ட, தாக்கப்பட்ட மற்றும் சிறைத்தண்டனை அனுபவித்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பணியாளர்கள் மேற்படி துணைக்குழுவிடம் முறைப்பாடுகளை தெரிவிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

செயலாளர்,

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு,

இல.163, “அசி திசி மெதுர”

கிருலப்பனை மாவத்தை, பொல்​ஹெங்கொட,

கொழும்பு 05.

தொலைநகல் - 0112 513645 / 0112 513469

மின்னஞ்சல் - media@mediagov.lk


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்