இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்ச ஒரு போலி தேசப்பற்றாளர் - இரா.சம்பந்தன்

12 Jan 2019

சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஒரு போலித் தேசப்பற்றாளர் என்று நேற்று நாடாளுமன்றத்தில் நேரடியாக குற்றம்சாட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஊழல் மோசடிகளை மறைத்துக்கொள்வதற்காகவே உத்தேச அரசியல் சாசனத்திற்கு அவர் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்தார். 

அதேவேளை அதிகாரத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு செயற்படும் மஹிந்த ராஜபக்சவும், அவரது விசுவாசிகளும் எவ்வாறு நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்கள் தொடர்பில் சிந்திக்கப் போகின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பிய சம்பந்தன், உத்தேச அரசியல் சாசன வரைபு தொடர்பில் அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை மிக மோசமான வறுமைக்குள் தள்ளியுள்ள ஊழல் மோசடிகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமானால், கொழும்பில் குவிந்து கிடக்கும் அதிகாரம் மாகாண மற்றும் பிரதேச மட்டங்களுக்கு பகிரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய சம்பந்தன், இதற்காகவே உத்தேச அரசியல் சாசனம் கொண்டு வரப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்