இலங்கை செய்திகள்

மஹிந்த எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காது - பந்துலால்

17 Jul 2017

அரசாங்கத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை அரசாங்கத்தை விட்டுப் பிரிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.

சிறிக்கொத்தவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்திலுள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதற்கு பல நடவடிக்கைகளில் மஹிந்த ஈடுபட்டுள்ளார். எனினும் அவரது கனவு பலிக்காது.

இன்று பல ஊடகங்களில் பலர் அரசாங்கத்தினை விட்டு பிரிவதற்கு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இது மக்களைக் குழப்பும் செயற்பாடுகளே ஆகும்' என பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV