இலங்கை செய்திகள்

மஸ்கெலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

26 Mar 2020

மஸ்கெலியாவில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பகுதியில் கொரானா தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு பேருக்கு 14 நாட்களின் பின் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான எவ்வித அறிகுறியும் காணப்படாமையினால் நேற்று அவர்களுக்கு கொரோனா ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும்ம் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நபர்கள் கடந்த 09 திகதி இந்தியாவுக்கு சென்று வந்ததன் காரணமாகவே இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த தனிமை படுத்தலின் போது மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர்கள் இவர்களின் நிலைமை குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்