இலங்கை செய்திகள்

மற்றுமொரு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு?

14 Apr 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக் கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஐ.தே.கவுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து, 113 உறுப்பினர்களின் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் திட்டத்தில் ஜனாதிபதி உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த திட்டத்துக்கு, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவின் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமன்றி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்