இந்தியா செய்திகள்

மருத்துவர்கள் இடையே நடைபெற்ற தகராறில் பச்சிளம் குழந்தை பலி

31 Aug 2017

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு அவசரக் காலத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சையின் போது இரு மருத்துவர்கள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி நாடு முழுவதும் பதை பதைக்க வைத்தது. மருத்துவர்களின் இந்த அலட்சிய செயலால் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் இரு மருத்துவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இந்த பிரச்சினையில் தலையிட்ட அம்மாநில உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? என்பது பற்றி பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்