இலங்கை செய்திகள்

மயிலிட்டியில் வீடொன்றின் அத்திவாரத்திலிருந்து கண்ணிவெடிகள் மீட்பு

14 Mar 2019

பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியில் மயிலிட்டி பகுதியிலுள்ள வீடொன்றின் அத்திவாரத்தின் கீழிருந்து இரண்டு கண்ணிவெடிகள் மற்றும் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இப்பகுதி மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

வீட்டினை சுற்றி முன்னர் இருந்த மதில் இடித்தழிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீள அமைக்கும் பணிக்காக நேற்று புதன்கிழமை ஏற்கனவே இருந்த மதில் அத்திவாரம் தோண்டப்பட்டது.

இதன்போது இரண்டு கண்ணிவெடிகளும், நூல் சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகளும் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து வெடிபொருட்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இப்பகுதி மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் அப்பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் காணப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்