வாழ்வியல் செய்திகள்

மன அழுத்தத்தால் இந்தியாவில் 5 கோடி பேர் பாதிப்பு

25 Feb 2017

இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் தற்போதைய ஆய்வு எச்சரிக்கிறது. மத்திய மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் மன ஆராக்கியம் குறைந்து வருவதால் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

‘மன அழுத்தம் மற்றும் பிற பொதுவான மன நோய்கள்’ என்ற தலைப்பில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

ஒட்டுமொத்த உலக நாடுகளை பொறுத்தவரை 32.2 கோடி பேர் மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் தெற்கு கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் தான் இந்த எண்ணிக்கை அதிகம். 

அன்றாட வாழ்க்கை முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் படைத்தது மன அழுத்தம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கமின்மை, எடை குறைவு, எந்த நேரத்திலும் வாட்டம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருப்பார்கள். சோக உணர்வை விட கூடுதலான விஷயம் தான் மன அழுத்தம். தீவிரமான அவநம்பிக்கையின்மை அல்லது அதிகப்படியான கோபம் ஆகியவையும் ஒருவரை எளிதில் மன அழுத்தத்தில் தள்ளிவிடும். மூளையில் உள்ள சில வேதிப்பொருட்களின் வினையாற்றல் காரணமாகவே மன அழுத்தம் ஏற்படுவதாக விஞ்ஞான உலகம் விவரிக்கிறது. 

கடந்த 2005 முதல் 2015-ம் வரையிலான காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த உலகத்திலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.4 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 2015-ல் மொத்தம் 5 கோடியே 66 லட்சத்து 75 ஆயிரத்து 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் 4.5 சதவீதமாகும். இதே காலக்கட்டத்தில் இந்திய மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் அதிகப்படியான கோபத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். மத்திய மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் மன ஆரோக்கியம் வேகமாக குறைந்து வருவதால் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்