இலங்கை செய்திகள்

மன்னார் புதைகுழியில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக் கூடு

14 Sep 2018

மன்னாரில்  இன்று 71 ஆவது நாளாக மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில், நேற்று இடம் பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம்  என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கமாக புதைக்கப்பட்ட நிலையில் இது காணப்பட்டது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்