இலங்கை செய்திகள்

மன்னாரில் மாணவர்களுக்கு சீனத் தூதரகம் உதவி

14 Mar 2019

வடக்குப் பகுதியைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்களுக்கு சீன தூதரகத்தின் சார்பில் புத்தகப் பைகள், எழுது பொருட்கள் வழங்கும் விழா மார்ச் 6ஆம் நாள் நடைபெற்றது. இலங்கைக்கான சீனத் தூதர் சங் சுயே யுவான், இலங்கை தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் பாதியுதீன் ஆகியோர், மன்னார் பகுதியின் 15 இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஏழ்மையான 300 மாணவர்களுக்கு இப்பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சங் சுயே யுவான் கூறுகையில், தமிழர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களுடனும், சீனா சீரிய நட்புறவைப் பூண்டு வருகின்றது, ஒரு பாதை என்ற ஆக்கப்பணி, இரு நாடுகளை நெருக்கமாக இணைத்துள்ளது என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில், சீனா மற்றும் சங் சுயே யுவான் ஆகிய எழுத்துகளை உள்ளங்கையில் எழுதுமாறு தூதரிடம் மாணவர்கள் நேசமுடன் கேட்டுக் கொண்டனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்