இலங்கை செய்திகள்

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை

16 Apr 2018

இளைஞர் ஒருவர் மனைவியைத் தாக்கி கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தங்கல்ல, குடாவெல்ல பகுதியில் இடமபெற்றுள்ளது.

22 வயதுடைய பெண்ணே இவ்வாறு, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

கொலை செய்த குறித்த பெண்ணின் கணவர் சூரியவெல்ல பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்த  மேலதிக விசாரணைகளை தங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV