இலங்கை செய்திகள்

மனித உரிமை ஆணையாளர் கவலை

14 Sep 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நேற்றைய அமர்வில், ஐ.நா மனித உரிமைகள் 46 வது கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இன நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை மேம்பாடு தொடர்பிலான தீர்மானங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தமது கருத்துக்களை முன்வைத்தார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பிலும் தனது கவனத்தை செலுத்தியிருந்த மிச்​சேல் பச்லெட் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள், ஊடகவியலாளர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறைகள் கவலையளிக்கின்றன என்று தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இலங்கை நேரப்படி  நேற்று (13)  பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. நேற்றைய நிகழ்ச்சி நிரலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam