இலங்கை செய்திகள்

மத ரீதியான உயர் சபையொன்று நாட்டுக்கு அவசியம் என்கின்றார் சம்பிக்க ரணவக்க

15 May 2019

மத ரீதியான உயர் சபையொன்று நாட்டுக்கு அவசியம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யாரும் வன்முறையில் செயற்பட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்களுக்கும், பதில் குற்றச்சாட்டுக்களுக்கும் மத்தியில்  நாடு சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தேசத்துக்கான பாதை எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றுகையில்  அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்