இலங்கை செய்திகள்

மத்திய கிழக்கில் துன்புறுத்தலுக்குள்ளான பெண் சடலமாக வருகை

12 Oct 2017

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு தொழிலுக்காகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று காலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பசறையைச் சேர்ந்த 36 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே உயிரிழந்ததாகவும், அவரது உடல் இன்றுதான் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மரணம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV