இலங்கை செய்திகள்

மண்வெட்டித் தாக்குதலில் குடும்பஸ்தர் பலி- புத்தாண்டில் வாகரையில் சோகம்

15 Apr 2018

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கைகலப்பில் 32 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மண் வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 5 வயதுடைய பெண்பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் வாகரை கட்டுமுறிவில் இடம்பெற்றுள்ளது.

இராசையா சவுந்தரராஜன் (வயது 32) என்பவரே சம்பவத்தில் மரணமடைந்துள்ளார். காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபோதையில் காணப்பட்ட இருவர்களுக்கிடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாகி அது மோதலாக மாறியது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். அவரை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்