இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திபூங்காவுக்கு வருகை தந்த நடிகர் விவேக்

13 Mar 2019

மட்டக்களப்பு மாநகரசபைக்கும்,   மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கும், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் விவேக், இன்று  சென்றார்.

மட்டக்களப்பில் திங்கட்கிழமை  நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விவேக்கை, மாநகரசபைக்கு வருமாறு, மேயர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கமைய, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திபூங்காவுக்கு வருகை தந்த நடிகர் விவேக்கை, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா. உதயகுமார்,  மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், பிரதி மேயர் ஏ.சத்திய சீலன், மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் எனப் பலரும் வரவேற்றனர்.

தொடர்ந்து நடிகர் விவேக்,  அங்குள்ள  மகாத்மா காந்தி உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தியதையடுத்து, தனது வருகைக்கான நினைவாக மரக் கன்றை நாட்டி வைத்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்