இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு-  மாவடி ஓடையில் காட்டு யானைகள் அட்டகாசம்

14 Apr 2019

மட்டக்களப்பு-  மாவடி ஓடை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம்  மற்றும் குடியிருப்பு வீடு ஒன்றினையும்  காட்டு யானைகள் தாக்கி முழுமையாகச் சேதப்படுத்தியுள்ளன.

இச்சம்பவத்தில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் குடும்ப உறவினர்களும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர்.

இவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை காட்டு யானைகள் வர்த்தக நிலையத்தின் பின்பக்கமாக சேதப்படுத்தும்  சத்தம் கேட்டுள்ளதுடன் நாய்கள் குரைக்கும் சத்தமும் கேட்டுள்ளது. 

இதையடுத்து யானைகளை விரட்டியடிக்க மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்காததனால் அனைவரும் வீட்டிலிருந்துவெளியேறி தப்பியோடியுள்ளனர்.

யானைகள் வர்த்தக நிலையத்திலிருந்த உணவுப் பண்டங்களையும் ஏனைய பொருட்களையும் நாசம் செய்துள்ளதாக  கடை உரிமையாளர் செல்லத்துரை யோகேஸ்வரன் கரடியனாறு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்